அன்னையரின் அன்பைப் பாராட்டிய 'அன்பின் இமயம் அம்மா’
- 6 days ago
- 1 min read

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை கோவை சரளா (வலமிருந்து மூன்றாவது) கலந்துகொண்டார்.
'8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்' மற்றும் 'டி3 வைரங்கள்' ஏற்பாடு செய்த 'அன்பின் இமயம் அம்மா' நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 11) நடைபெற்றது. இதில் பல தாய்மார்களும் அவர்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.
முதல்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகை கோவை சரளா வந்திருந்தார்.
அம்மா என்பவருக்கு ஈடாக யாரும் இல்லை எனக் கூறி, ஒரு தாயின் சிரமங்களையும் துன்பங்களையும் கூறும் வகையில் உரையாற்றினார்.
"ஒரு தாயின் கொஞ்சலும் கெஞ்சலும்: சிறுவயதில் நிலாவைக் காட்டி உணவு ஊட்டுவேன். ஆனால் பெரியவனான பிறகு அதே வாயால் நீ என்னைத் திட்டுகிறாய். இருப்பினும், அவற்றை மன்னித்துவிட்டு உனக்காக வாழ்கிறேன்," என்று அன்னையின் தியாகங்களைப் பற்றி அவர் பேசினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மூன்று தாய்மார்களுக்கு அன்னையர் திலக விருது வழங்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் படிக்கும் இவரது பிள்ளைக்கு வளர்ச்சி மற்றும் ஆட்டிசம் குறைபாடு உள்ளது. "சிறப்புத் தேவையுடைய பிள்ளைக்குப் பெற்றோராக இருப்பது அதன் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது.
என் பிள்ளைக்குச் சுதந்திரமாக இருப்பதைக் கற்றுக்கொடுப்பதே என் வாழ்வின் இலக்கு," என்றார் அவர்.
திருவாட்டி முத்துவீராயி சிவசுப்பிரமணியம், உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் தன் மகனிடம் இருந்து எவ்வாறு தைரியமாக இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதாகக் கூறினார்.
திருவாட்டி கவிதா குலோத்துங்கன், இவரது மகளுக்கு ஆட்டிசம் மற்றும் வலிப்பு நோய் உள்ளது. "எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு அஞ்சுவதை விட அதை நேர்மறையாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளேன். குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து வாழ அவன் கற்றுக்கொடுக்கிறான்," என்றார்.
மேற்கண்ட மூவரும் தங்கள் பிள்ளைகள், வேறு பிள்ளைகளிடம் இருந்து வேறுபட்டு இருப்பதால் அவர்களைக் கேலி செய்யவும் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடவும் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் பிற அம்சங்களான விளையாட்டுகள், நடனங்கள், பாடல்கள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கலும் நடைபெற்றன. பல பிள்ளைகளும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி அன்னையர்க்கு நன்றி கூறினர்.




Comments