top of page

GIA Natural Diamond Certified

இணையம் மூலம் வைர வர்த்தகம்

  • 4 days ago
  • 1 min read

சிங்கப்பூரான திருமதி ரஞ்சனிஸ் ராஜேந்திரன் மும்பையில் 10 ஆண்டுகள் வசித்தபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த வைர நகைகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.


சிறிய வைர நகைகள் பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதுடன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை தருவதை உணர்ந்ததாக திருமதி ரஞ்சனிஸ் தெரிவித்தார். இவரது தாத்தா திரு சீனிவாச பத்தர் 1900களில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் நகைப் பத்தராக இருந்தவர்.


அவர் வழியிலேயே செல்ல ஆசைப்பட்ட திருமதி ரஞ்சனிஸ், கடந்த ஆண்டு இணையத்தில் 'dcubediamonds' என்ற வைர நகை வர்த்தகத்தைத் துவங்கினார்.


விலை உயர்ந்த வைர நகைகளை இணையத்தில் எப்படி வாடிக்கையாளர்கள் நம்பி வாங்குகிறார்கள் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது, "சராசரியாக ஒரு வாடிக்கையாளருடன் சுமார் நான்கு மணி நேரம் செலவிடுகிறேன். அவருடன் அமர்ந்து நாங்கள் விற்கும் வைரங்களைப் பற்றிய தகவல்களை விவரிப்பேன். நகையை உடனே விற்றுவிட வேண்டும் என்பதில் என் நோக்கம் இருக்காது. முதலில் எனது வாடிக்கையாளர்களுக்கு வைர நகைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்," என்றார் அவர்.

இணைய வர்த்தகத்தின் வழி கடைக்கான வாடகை, ஊழியர்களின் சம்பளம் போன்ற செலவுகளைத் தவிர்க்க முடிகிறது என்றார் திருமதி ரஞ்சனிஸ்.


"நானும் ஒருநாள் வைர நகை வாங்குவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை," என்று தமது வாடிக்கையாளர்கள் கூறும்போது தமது வர்த்தகத்தின் குறிக்கோளைப் படிப்படியாக அடைவதை உணர்வதாக அவர் தெரிவித்தார்.


 
 
 

Comments


bottom of page